இது சொல்ல துடிக்கும் தருணம்
உள்ளத்தில் ஓடும் கனவு
கண்களில் நின்ற நினைவு
எங்கோ செல்கின்ற வாழ்வு
ஒரு கணத்தில் துன்பம்
மறு கணத்தில் இன்பம்
கூடி நின்ற நட்பு
விலகி செல்கின்ற உறவு
நேற்று அடைந்த தோல்வி
இன்று பெற்ற வெற்றி
ஒருவரை போன்றும் தானும்
தன்னை போன்றும் மற்றவரும்
மனம் பேசும்
வார்த்தை பேசாத கணம்
ஒரு நாள் வரும் மரணம்...,
என்று சொல்வது தருணம்...!