வெறுத்து விடு ...!!
வெற்றி பெற்றாலும்
வெட்டியாய் நின்றாலும்
வெறுப்பில் இருந்தாலும்
வெந்துமனம் நொந்தாலும்
வெண்குழல் விரலேந்தி
வெச்செனவு செய்து
வெறியன் போலும்
வெறும்புகை இழுத்தால்
வெஞ்சமன் வருமுன்
வெதிரும் உளமே .....!!
வெச்செனவு - சூடு
வெஞ்சமன் - யமன்
வெதிர் - நடுக்கம்