உறுப்பினர் கட்டணம்..-ஒரு முன்மொழிவு....
தோழமை நெஞ்சங்களே
அண்மையில் கேள்வி பதில் பகுதியில் தளத்தின் சில குறைபாடுகள் குறித்த விவாதத்தில் ஒரு கருத்து தோழர் ஈஸ்வரன் மூலம் அளிக்கப்பட்டது..(அங்கு சென்று வாசித்துப் பாருங்கள்...) அதையே தோழர் சதீச்குமாரும் மொழிந்துள்ளார்...நானும் தோழர் எ.சூறாவளியும் வழி மொழிந்துள்ளோம்..இக்கருத்து ஏன் நடைமுறைமைக்கு உட்படுத்தப்படக்கூடாது....
தளத்தின் கவனத்திற்கு :
1. நுழைவுக் கட்டணம் பெறலாம்....(ரூ.100/-)
2. ஆயுள் கட்டணம் பெறலாம்..(ரூ.3000/-).-இவர்களுக்கு விதி 3ம் 4ம் பொருந்தாது..
3. மாதம் ஒன்றுக்கு குறிப்பிட்ட வரிகளுக்கு மேல் படைத்தவர்களுக்கு கட்டணம் பெறலாம்..(ரூ.100/-)
4. குறிப்பிட்ட எண்ணிக்கையில் (100/150/200) படைப்புகள் படைத்தப் பின் மறு நுழைவு கட்டணம் பெறலாம் (ரூ.300/-)
5. மணமக்கள் /பொருட்கள்/நூல்கள் தேவை , பிறந்தநாள் , மணநாள் , இல்லத்து நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் செய்ய கட்டணம் பெறலாம்...(ரூ.300/500/1000)
நமது வீடாகியுள்ளது இத்தளம் . நமது பங்களிப்பும் இருப்பதில் தவறில்லை
மேற்கண்டவை எதுவும் வேண்டாமென நிர்வாகம் கருதினால் தளத்தின் பங்குதாரார்கள் என விருப்பம் பெற்று இணைத்துக்கொள்ளலாமே...நிதி நெருக்கடி இருந்தாலும் இல்லையென்றாலும்..!!.
ஆக்கவிழைவுகளோடு அகன்