புன்னகை பலவிதம்
காதலிக்கும்போது அவளிடம் கண்டேன் -
மயக்கும் புன்னகை
கல்யாணத்தன்றோ - மந்திரப் புன்னகை
சில பல நாளிலோ மாயப் புன்னகை
இந் நாட்களிலோ - தந்திரப் புன்னகை
புரிந்து கொண்டேன் அவள் புன்னகையை
மறந்து விட்டேன் என் புன்னகையை