வட்ட நிலா...
முரண்களின்
உள்ளங்கைக்குள்
ரகசியங்களின்
கோடுகள்....
தேடித் திரிய
முற்பட்டும்
தீராமலே நின்று
போகும் காடுகள்....
காற்றைப் பிடித்த
இறகின் கண்களில்
நுண்ணுயிர்களின்
காலத்தை
கடந்து விட
முடிவதில்லை....
அடுத்த வரி
மறந்தவன்
வாசிக்கத் துவங்கியபடியே
எழுதுகிறான்
ஏட்டை வானமாக்கி....
சுவரை
வரையாமல் விட்டவன்
ஓவியமாக்கிய தூரிகைக்கு
வாழ்க்கைப் பட்டவன்....
நித்திரையில்லாமல்
கவனிக்கப் படும்
வெண் நிலா
பெண்ணொருத்தி
மறந்து போன
வட்ட பொட்டு ...