+சாதிக்கலாம் வாங்க!+
கிடைக்கும் கைத்தட்டல்
ஒவ்வொன்றின் ஓசையும்
இனிய கானமாய் இனிக்கும்
படைப்பாளியின் செவிக்கு..
தன்மேல் விழும்
ஒவ்வொரு வெறுப்பெனும் அம்பும்
தன் முன்னேற்றத்திற்கான
படியாகவே எடுத்துக்கொள்வான் அவன்..
எவரெஸ்டை எட்ட நினைக்கும்போது
அவ்வப்போது உடம்பு வலியும் உண்டு!
ஆக்ஸிசன் குறைபாடும் உண்டு!
அதை எல்லாம் ஜெயிப்பவனே சாதிக்கிறான்!
எவரெஸ்டை எட்ட நினைத்தபிறகு
சின்ன சின்னதாய் தட்டுப்படும்
ஒவ்வொரு கல்லையும்
எளிதாக நொறுக்கிவிடலாமே!