அமைதி தேடி வந்த புறா

தமிழ் மண் எழுச்சி பெற
தரணியில் மணம் பரப்ப
வண்டுகள் இசை பாட
வண்டியில் எழுந்து வந்த புறா!
விடுதலை தேடியே
விரைந்தோடி சிறகடித்து
பறந்து வந்த புறா!
அமைதி தேடி
அழு குரலில் வாதாடி
ஆண்ட மண் தேடி வந்தபோது
வங்கக்கடலில்
வாளரக்கர் சூழ்ந்தனர்
சிரித்துமோ சீறுட்டாய்
சீக்கிரமாய் விட்டிடு என்றாய்
போருக்கு வரவில்லை
பொறுத்திடு என்றாய்
பேச்சு வார்த்தைதான்
போய் வர விடை கேட்டாய்
பொங்கினாய் பொறுக்காமல்
போரிடவே துணிந்து கொண்டாய்
வெடித்தது பேரிடி ஒன்று
வங்கக்கடலில் படகில் இடியொன்று
இரை தேடி வந்த புறா-இடையிலே
துன்பத்துடன் துடிதுடித்தது
கிட்டுவின் செய்தி கேட்டு
கூவியது தமிழ் தேசம்
மூத்தோர் தளபதியாய்
முப்படைகோர் அதிபதியாய்
வீரருக்கோர் வழிகாட்டியாய்
ஒளிந்த விளக்கு கிட்டு என்னும் ஒளி விளக்கு!
கிட்டுவே எட்ட இல்லை ஈழம்
கிட்டவே பிறக்கப்போகுது
மலர்ந்து மணம் வீசட்டும்
தமிழ் ஈழம் மலரட்டும்!