உள் நாட்டு அரசியலை ஓரங்கட்டு
கருத்தில் வேறுபடுதல் தவறில்லை தம்பி
கருணையில் ஒன்றுபடு அன்பினை நம்பி
பகையுணர்வு நம் மனதினில் வேண்டாமப்பா பாசத்தில் வேசமும் நமக்கேனப்பா...?!
அழகிய நினைவுகள் மனதினில் உண்டே
அது நாம் இந்தியர் எனும் மலர்ச் செண்டே...
சகோதரத்துவம் என்பதை மனதினில் கொண்டே
சண்டைகள் தீர்ப்போம் சந்தோசமாய் இன்றே.....