ஆதலால்.....வரட்டும் சுனாமி
வரட்டும் சுனாமி
வந்து என்னை
என்ன செய்துவிடும்...?
எந்தப் பேரலையையும்
எதிர்த்து நிற்கும் திராணி
என்னுள் நிறைந்திருக்கு........
அது
குறையும் போது
ஆறுதல் தர
அரசு இருக்கு.....
அரசு டாஸ்மாக்
கடைகள் இருக்கு...
அங்கே
கவலைகள் மறக்க
உள் நாடு வெளி நாடு
கசாயம் மருந்து இருக்கு
கட்டிங்கோ....?
குவார்டரோ.....?
அம்மா தண்ணீர்
கலந்து அடித்தால்
ஆறிப் போகும் ரணங்கள்
ஆதலால்...........
வரட்டும் சுனாமி
வந்து என்னை
என்ன செய்து விடும்?