"காதலியின் மனசு "

"காதலியின் மனசு "

என்னவனே!
காதல் பிறவி தந்து
காதலி என்னும் பதவி தந்தாய்,

உனக்காக பிறந்தவள் நான்
என் இரண்டாம் உலகம் நீ,



காதல் அன்பு பார்வையால்
என்னை கவிழ்த்தவனே,

என் உயிரும் உருகி போனதே
உன் ஞாபகத்தால்,

பிரிவு வேதனைகளை தரும் என்பதால்
சோதனைகளை சுமந்துகொண்டு இருக்கிறேன்,

என்னவனே!

நான் உன் நினைவால் வாடியதை
என் தோழிகள் கூட அறிந்திலார்,

என் வீட்டு கண்ணாடி
தலையணை, படிக்கட்டு ,
மொட்டைமாடி, ஜன்னல் கம்பி
இவைகளுக்கு தெரியும்

என் துயரம் என்னவென்று,


நான் வாழ்வது உனக்காக
பிரிவுகளை கடந்தும் வாழும்
நம் காதல் வாழ்க்கைக்காக,
அன்பு காதலி!


என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை_பாபு.த (17-Oct-13, 11:36 am)
பார்வை : 142

மேலே