என் பேனா

உன்னை கரம் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை ,
நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?

என் கையடக்கத்தில் வந்தாயே வலிக்கிறதா ?
சொல் ! உன் தண்டனை தான் என்ன ?
வெருப்பா ? என்னக்கு கொடுக்கும் விருதா ?

நான் உன்னை நினைத்து எழுதும் கவிதையை
- கூட
நீ தான் எழுதிக்கொண்டிருகிறாய்
- உனக்கென்ன அப்படி ஒரு கற்வம் !

என் காகிதத்தில் வலம் பேனாவா ? இல்லை
என் காவியத்தில் வலம் வரும் பெண்ணா நீ ?
நீ என்னக்கு செய்யும் கைமாறு காகிதம்
நான் உன்னக்கு செய்யும் கைமாறு
கவிதை மட்டுமே ,
சொல் ! என்ன செய்யவேண்டும் ?

அறுபதிலும் உன்னை ஆராதனை செய்வேன்
சொர்க்கத்திலும் உன்னை சுமப்பேன்
என் ஐந்து விரலில் வந்த ஆறாம் விரலா ?
என்னக்குள் வந்த ஏழாம் அறிவா ?

என் விரலுக்குள் வந்த வெளிச்சமே ,
என் வாழ்வில் வந்த வழியே
தொடர்கிறேன் உன்னோடு நான் ......


( சதீஷ்கவிதை துளி )

எழுதியவர் : sathishkavithai (17-Oct-13, 12:39 pm)
சேர்த்தது : sathishkavithai
Tanglish : en pena
பார்வை : 759

மேலே