பரம்பரை வீடு.....!!!!!!
சிதைந்து
கிடக்கிறது
பரம்பரை வீடுகள்
சிதைந்துபோன
பரம்பரையின்
சாட்ச்சியாய்
முகம்
உடைந்து
முகவரியை
தொலைத்து
நிற்கிறது
புகைப்படத்தில்
செல்லரித்து
சிரிக்கிறார்கள்
முதாதையர்கள்
நினைவுகளாய்
நிற்கிறது
புகைப்படம் ஒட்டிய
கதவும்
கிறுக்கி வைத்த
சுவர்களும்
வாழையடி வாழையாய்
வாழ்ந்த வீட்டில்
வேரருந்தவர்களின்
ஆன்ம சுற்றக்கூடும்
யாரும்
இல்லா
வீட்டில்
அவ்வப்போது
கேட்க்கிறது
அடுப்படியில்
சிணுங்கும்
சத்தமும்
கூடத்தில்
இயலாமையின்
பெருமூச்சும் ......!!!!!!