தாய்மை

சுற்றாத கோவில் இல்லை
வேண்டாத தெய்வம் இல்லை
இருக்காதா பத்தியம் இல்லை
நான் சூல் கொள்ள

கரு கொள்ளாததால்
பந்தம்களால் தாழ்த்த பட்டேன்
சுப நிகழ்ச்சியில் ஒதுக்க பட்டேன்

வீட்டில் பல வளம் இருந்தும்
நிம்மதியாய் இருந்த நாள் ஏதுமில்லை
காரணமோ நான் சூல் கொள்ள வில்லை

இறைவன் கருணையால்
மடி நிறைந்து மனம் நிறைந்தது
சிப்பிக்குள் முத்தாய் முகம்காட்டி
அம்மா என்று அழைக்க வருவதை எண்ணி
இன்ப துளிகள் என் கண்ணில் !

கருவறையில் வீணை மீட்டி
சிந்தையை மயக்கிய சிறு தளிரே
அள்ளி அணைக்க ஆவல் கொண்டேன்
அன்பின் வித்தாய் வாழ்வின் சொத்தாய்
என் பெண்மையின் பூர்த்தி ஆக்கிய
கம்பன் கற்பனைக்கும் எட்டாத குல வித்தே

அகிலம் எல்லாம் காலடியில் இருந்தாலும் – உன்
அம்மா என்ற அழைப்புக்கு ஈடாகுமோ ???

எழுதியவர் : கதிஜா (17-Oct-13, 7:55 pm)
Tanglish : thaimai
பார்வை : 113

மேலே