ஏன் படைத்தாய்?

காக்கைக்கும் உணவிருக்கு - இந்த
கலியுகத்தில்
மனுஷ பயலுக்கு மண்டி கூட இல்ல - இந்த
மண்ணுலகத்தில் !

சொத்து சேத்து வச்சதால
சொந்தம் வந்தது ! - நாங்க
பசிய சேத்து வச்சதால
வறும வந்தது - தினம்
மரணம் வந்தது !

திணை சோறு திண்ட காலம்
திரடாகிப்போச்சு ! - நாம
திருடனாகி சாப்பிட அது
வழியாகிப்போச்சு !

" அடிமை இல்லை " என்று சொல்லி -பசி கொடுமையாகிப்போச்சு
அரிசி கூட அரசியலை
முடிவாக்கிப்போச்சு

மண்ணு பொண்ணு தண்ணி கூட
பணமாகிப்போச்சு ........
வருங்காலம் எங்களுக்கு
கேள்விக்குறியாக ஆச்சு !!

அரை சான் வயிறுக்கு தானே - இந்த
அக்கப்போரு !
ஏன் கடவுளே படைத்துவிட்டாய் - இந்த
வயிற்று போரு?

எழுதியவர் : (17-Oct-13, 8:03 pm)
பார்வை : 108

மேலே