மாலை வரும் சுகம்..

பள்ளிவிட்டு வரும் மழலை
பணிமுடித்து வரும் பெண்மகள்
வேலைமுடித்து வரும் ஆண்மகன்
வீடுவந்து சேர்ந்தபின்தான்
என்ன சுகம் என்ன சுகம்!
எல்லோரையும் அனுப்பிவிட்டு
தன்னந்தனியாக அமர்ந்திருக்கும்
அந்திம வயதினர்க்கு அதுதானே சுகம்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 11:33 pm)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 113

மேலே