வறுமை
நிர்வாணமாய் வீதியில்
கறந்த இடத்தை தேடி
பல முறை முட்டி மோதிய
காய்ந்த உதடுகள்….
எத்தி பிடித்தவுடன்
களைத்துப் போய்
முளைத்தெழுந்தன காம்புகள்
தொடர்ந்து சப்பினாலும்
சிவக்கவில்லை….
உதடும் காம்புகளும்
மிச்ச மீதியை
கொட்டித் தீர்த்திட
சொட்டுக்கு அழுத்தியது
எலும்பு விரல்கள்…..
தன் உடலில் வலு
இல்லாவிடிலும்
பசிக்கும் குழந்தைக்கு
பால் கொடுக்கிறாள்….
அவள் பசியை போக்க
உணவு இல்லையே….
உணவை வீணாக்கும்
மனித மிருகங்களே!!!!!
உணவு இல்லாமல்
திண்டாட்டத்தில்
வாழும் மனிதர்களைப்
பாருங்கள்……
அதன் அருமை புரியும்