+இருக்கா இருக்கா இருக்கா!+
இருக்கா
பேனா இருக்கா!
தபால் நிலையத்தில் நம்மிடம் இருக்கும்
ஒற்றைப்பேனாவையும் வாங்கி திரும்பகொடுக்காமல் போகும்
பேனா வாங்கக்கூட சம்பாதிக்காத ஏழைகளுக்கு
கொஞ்சமாவது புத்தி இருக்கா?
இருக்கா
சில்லறை இருக்கா!
பேருந்து பயணத்தில் ஒரு ரூபாய் இல்லாவிடில்
எல்லோருக்கும் முன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசியும்
சில சமயம் நமக்கு தரவேண்டிய ஐந்துரூபாய்க்காக
பயணம்முழுதும் தவிக்கவும்விடும் சில நடத்துனர்களுக்கு
கொஞ்சமாவது கனிவு இருக்கா?
இருக்கா
காசு இருக்கா!
சின்ன சின்ன நோய்க்கு கூட
பெரிய பெரிய சிகிச்சை எடுக்கச்சொல்லி
தன்னை கடவுளாய் எண்ணிவரும் எல்லோரையும்
பயமுறுத்தும் சில மருந்துவர்களுக்கு
உடம்பிலே தான் மனசு இருக்கா?
இருக்கா
மூளை இருக்கா!
ஏதோ அவர்களிடம் இல்லாதது வேண்டும் என்பது போல
அவ்வப்போது மாணவர்களிடம் இதே கேள்வியை கேட்டு
அவர்களை துன்பத்தில் ஆழ்த்தும் சில ஆசிரியர்களுக்கு
நிஜமாகவே மூளை இருக்கா?
இருக்கா
துணிவு இருக்கா!
குடித்துவிட்டால் வீட்டுக்குள்ளே ராஜா போல
சும்மா தெருவில் போகும் எல்லோரையும் சண்டைக்கு இழுக்கும் குடிகாரனே
எல்லையிலே சென்று எதிரியை எதிர்க்கும் அளவு உனக்கு
நெஞ்சிலே துணிவு இருக்கா?
இருக்கா
கனிவு இருக்கா!
இருக்கும் பணத்தையெல்லாம் நிறைவாய் பெற்றிருக்கும் கடவுளுக்கு
நிறையவே அள்ளி அள்ளி கொடுத்து
வறுமையில் வாடும் எளியோருக்கு ஒரு நாளும் கிள்ளிக்கூட கொடுக்காத செல்வந்தரே
உங்களிடம் இதயம் இருக்கா?