வராதது...

மண்டைகள் உடைந்தன
மதக் கலவரத்தில்..

சிந்தியது மனித இரத்தம்,
எந்தக் கடவுளும் வரவில்லை..

வந்ததெல்லாம்
வழக்கம்போல் காக்கிச்சட்டைகள்தான்-
அதுவும் கடைசியாக..

தேவையா இது,
இதை போதிக்கவில்லையே
மதங்களெல்லாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Oct-13, 7:27 am)
பார்வை : 249

மேலே