இனிய காலை வணக்கம் !!

வார ஓய்வுக்கு
அச்சாரம் வைக்கும்!
அல்லல் படுத்தும்
நாள்களை தள்ளிவிட்டு
கொஞ்சம் ஆசுவாசப்படவைக்கும்!
நிம்மதி மூச்சுக்கு
நேரம் ஒதுக்கும் நாளாம் சனி!
அழகாய் பிறந்தது
ஆனந்தம் தர வந்தது!

அமைதிகொள்ளுங்கள்
அலுவல் மிச்சசொச்சமெல்லாம்
இன்றோடு விட்டொழியுங்கள்!
பிரச்சனைகளை எல்லாம்
ஒதுக்கிவிட்டு
இளைப்பார வாருங்கள்!
புதுப்பொளிவு பெற
நாளை ஞாயிறு காத்திருக்கு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 7:33 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 12121

மேலே