வெத்துபேப்பர்

மஞ்சள் வான மாலை பொழுதில்... ஒன்றாய் பிறந்தன..
வெத்து பேப்பரும்... வடிவேலன் மகளும்....

சீனர்களின் அடையாளமாய்.. சமாதானத்தின் சின்னமுமாய்..
வெள்ளை வெளேரென பிறந்தது வெத்து பேப்பர் அங்கே...
பாரதத்தின் மேனி தனை பச்சை பட்டினால் அழகு படுத்தும்..
உழவன் மகளாய் பிறந்ததொரு மழலை இங்கே..

தன்னோடு பிறந்த பேப்பர்கள் யாவும் அதனதன் நிறத்திற்கேற்ப
அலங்கார தோரணமாய்! அடுக்கி வைத்த புத்தகமாய்!
அன்றாட செய்திதாளாய்! உயர பறக்கும் பட்டமுமாய்! வடிவம் கொள்ள..
தான் கொள்ளும் வடிவம் யாவோ?என்று ஏங்கும் வெத்துபேப்பர் அங்கே!

சுதந்திர காற்றை முழுதாய் சுவாசித்து மண்ணை ஆளும் பெண்களும்..
விண்ணை தொட்டு முத்தமிட்ட சாதனை மங்கையும் பிறந்த பூமியில்..
வறுமை சாமிக்காய்... இன்னும் ஒரு வேளை விரதமிருகிறாள்..
கரிசல் மண்ணின்... செல்ல மகள் இங்கே!

வருடம் பல கடந்த பின்னும்.. கண்ணீர் மட்டும் குறைய வில்லை..
கனவில் மட்டுமே தோரணமானது வெத்து பேப்பர்..
கனவிலும் கை பற்றவில்லை கண்ணன் கூட.. இந்த கன்னி மகளை..
இதோ! நீல மை தொட்டு நான் கவிதை வடிவாக்கினேன் இந்த வெத்து பேப்பரை!

நீயும் உன் கட்டை விரல் தனில் சிவப்பு மை தொட்டு...
வரதட்சணை கெதிராக.. கன்னி அவள் நெத்தியிலே..
முற்று புள்ளியிட்டு.. அவளையும் ஒரு கவிதையாக்கு!
கம்பனை மிஞ்சி இங்கே கவி படைத்த பெருமை உனைச்சேரும்!!!

எழுதியவர் : பிரபு பாலசுப்பிரமணி (19-Oct-13, 6:57 pm)
பார்வை : 147

புதிய படைப்புகள்

மேலே