மௌனங்கள் தனி வழியில்

தூண்டல்களும்
துலங்கல்களும்
சம தளத்தில்....!
சர்ச்சைகளும்
விளம்பரங்களும்
தம் போக்கில் ...!
சமூக மாற்றங்கள்
எப்போதும்
வெறும் எழுத்தில்..!
ஏட்டுச் சுரக்காய்
கறிக்குதவுமா என்று
ஆய்வுகள் கருத்தரங்கில்..!
பெண்ணியப் பேச்சுக்கள்
மேடைகளில் வீராவேசமாய்..
பெண்ணடிமை வீடுகளில்..!
எல்லாவற்றிலிருந்தும்
நிரந்தர விடுதலை பெற்று
`மௌனங்கள்` தனி வழியில்..!
---------------------------------------------------------------
தோழி துர்க்கா