மனந்தளராதே.........!
அகிலமெலாம் அறிந்திடவே,
அன்னைத் தமிழ் மொழியதனை,
ஆண்டு பல தசம் முன்பே,
அன்புடனே ஈந்திட்ட,
அகஸ்தியனுன் பதம் பணிந்து,
அளிக்கிறேன் யான் இப்படைப்பை,
அன்பு சேய் உனக்கு ..........!
நல் மகனே நானுனக்கு,
நவிலுகிறேன் நற்செய்தியொன்று,
மடிசுமந்தோள் நானில்லையெனினும்,
மனதிலுன்னை சுமந்திடுவேன்,
மனந்தளராதே.........!
வாழ்க்கையென்ன வாழ்க்கையென்று,
வாட்டம் கொள்ளாதே!
இளையோனாய் ஆண்சேயும்,
இளையோளாய் பெண்சேயும்,
ஈன்றோளாய் நானுனக்கு,
ஈன்றிடுவேன் சலனம் வேண்டாமே............!
பீடை பல ஓடிடுமே,
பிணியதுவும் தீர்ந்திடுமே,
ஆத்திகளும் சேர்த்திடுவாய்,
சுபசெலவும் செய்திடுவாய்,
வேட்டல் ஒன்று செய்திடுவாய்,
தாரமதாய் நல்மகளும் வந்திடுவாள்,
தயக்கம் வேண்டாமே..........!
அன்னையாக நானிருந்து,
அரவணைத்து காத்திடுவேன்!
ஆண்டு பல வாழ்கவென்று,
ஆழி கரை அன்னையிடம்,
ஆயுளெல்லாம்,வேண்டிடுவேன்.............!!!!