பாபரின் ஆன்மா
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
தோண்டி எடுக்கப்படுகிறது
அரசியல் மந்திரவாதிகளால்
பாபரின் ஆன்மா!
இன்று பாபர் பிறப்பெடுத்திருப்பதோ
இராமச்சந்திரனின் பேரனாக!
பாபரும் ராமரும் ஒன்று
புரிந்தவர் வாழ்வு நன்று!
அறியாதவர் நாமென்று
அறிந்துகொண்ட அவர்களோ
ஆட்டிப்படைக்கின்றார் நம்மை!
ஆட்சிக்கான சூழ்ச்சியை விரட்டிடுவோம்!
தற்பெருமை பொறாமை
விட்டொழிப்போம்
தனித்துவமாய் வாழ்வோம்
தனித்தனியாக அல்ல!
ஒன்றுபட்டு இருப்போம்
என்றும் நாம் சகோதரராக!
உலகே வியந்துநோக்க
உயர்வோம் நல் இந்தியராக!