உடல் தானம்
காய்த்து குளுங்கும்
பச்சை மரமும் காய்ந்தால்
விறகாகும் !
ஆனால்,
மனிதனை இருக்கும்வரை
கண்ணே என்பார் சிலர்
மணியே என்பார் சிலர்
ராஜா என்பார் சிலர்
இந்த உடல் கூட்டில்
உயிர் என்ற காற்று
இருக்கும் வரை !
காற்று பிரிந்தால்
தூக்கடா
அந்த பிணத்தை !
ஏத்தடா
அதை பாடையில் !
இறக்கடா
இதை குழியில்
என்பார் !
இவ்வாறு
எதற்கும் பயன்படாத
இந்த
உடலை வைத்துக்கொண்டு
ஆட்டம் போடும்
மனிதனே !
நொடிப் பொழுதில்
தன் நிலைமாறும்
இந்த உடலை
வைத்து கொண்டு
ஆடும் ஆட்டத்தை
நிறுத்து !
மற்றவர்க்கு உதவு !
இறந்தப்பின் உதவாத
இந்த உடலை
இருக்கும் போதே
கொடுத்து விடு
தானமாக !
இறந்தப்பின்பும்
உயர்ந்து நில்
கடவுளாக !!!