தாய்

அம்மா அம்மா
எந்தன் ஓவியமே
நாளும் நீ என் காவியமே
எந்தன் கண்ணின் மணியே
நான் பத்துமாத சுமையே (அம்மா

பூவாய் என்னை பூமியில் படைத்தாய்
தாயாய் என்னை நெஞ்சில் அணைத்தாய்
வாடுவதோ என் நெஞ்சமே
நாடுவதோ என் தஞ்சமே (அம்மா

உயிரும் நீயே உலகம் நீயே
விண்ணும் நீயே மண்ணும் நீயே
விட்டு கொடுப்பாயே
தட்டி கொடுப்பாயே (அம்மா

தூங்காமல் என்னை தூங்க வைப்பாய்
நீங்காமல் என்னை நெஞ்சில் வைப்பாய்
ஆங்காரம் என்றால் அணைத்து நிற்ப்பாய்
பாங்காய் என்னை பாரில் வைத்தாய் (அம்மா

கண்ணில் தூசு இமைக்கு வேலையில்லை
என்னில் மாசு உனக்கும் வேலையில்லை
சுமந்தாய் நீயே சுமப்பேன் நானே
சுற்றுகிறேன் நான் தினம் உன்னையே (அம்மா

எழுதியவர் : ச.கே.MURUGAVEL (20-Oct-13, 3:09 pm)
Tanglish : thaay
பார்வை : 99

மேலே