வியாபார நுணுக்கம்
கல்லுக்கட்டி கந்தசாமிக்கு படிப்பறிவை விட அனுபவ அறிவு அதிகம்.கந்தசாமி சீசனுக்கு தகுந்தமாதிரி எல்லா வியாபாரமும் செய்யக்கூடியவர். எதிலும் வேகம்.
குறைந்த லாபம்இருந்தால்போதும்.மர சாமனில்லுருந்து வைரம் வைடுரியம் என்று அவர் கைக்கு வரும். புது சாமான் என்பது மட்டுமல்ல , பழைய சாமான்களும் அவர் வியாபாரத்தில் உண்டு.
போன வாரம் அவர் செய்த வியாபாரம் வெள்ளி சாமான்கள். கை பணத்தைப்போட்டு பொருளை வாங்கிவிட்டார் . யாருக்குத் தேவை , யாரிடம் போனால் படியும் என்ற அவர் கணக்கு எப்போதும் சரியாக இருக்கும்.
புதுக்கோட்டையில் இருக்கும் ராங்கியம் ராமசாமி செட்டியார் மருந்து வணிகத்தில் பெரிய புள்ளி. அவருக்கு மகள் இருப்பதும் மகள் திருமணத்தில் கொடுக்க அவருக்கு இந்த சாமான்கள் தேவை இருக்கும் என்பது கந்தசாமியின் கணிப்பு. அவருக்கு போனில் பேசி விஷயத்தை சொன்னவுடன், சாமான்களுடன் புறப்புட்டு வரச் சொல்லிவிட்டார்.
அடுத்த 2 மணி நேரத்தில் கந்தசாமி, ராமசாமி செட்டியார் வீட்டில் ஆசர். எலெக்ட்ரானிக் தராசு, சகிதம் இறங்கியவுடன், மள மளவென வெள்ளி சாமான்கள் எடுத்து வைக்கப்பட்டன , விலை பேசி முடிவானவுடன் ,கந்தசாமி எடை போட்டார். எடை குறிக்கப்பட்டன. செட்டியாருக்கு ரொம்ப திருப்தி, சாமனிலும்,விலையிலும் .
எல்லாம் முடிந்தவுடன் ,கந்தசாமி பணத்தை பெறுவதில் எந்த அவசரமும் காட்டவில்லை.
அப்பச்சி, என் மக வீடு இங்கு பக்கத்தில் இருக்கிறது , ஒரு நடை போய் தலையை காட்டிவிட்டு வந்திடறேன் என்று சொல்லி விட்டு எலெக்ட்ரானிக் தராசு ,மற்ற கொண்டுவந்த பைகள் எல்லாவற்றையும் அங்கயே வைத்துவிட்டு கிளம்பிவிட்டார் .
ராமசாமி செட்டியாருக்கு ஒரு சபலம். எல்லோருக்கும் இயற்கையாய் வருவது.எலெக்ட்ரானிக் தராசு தான் இருக்கிறதே, நம் திருப்திக்கு திறம்ப எடை போட்டு பார்த்து விடுவோம் என்று எடை போட்டு பார்த்து விட்டார்.
எடை மிக சரியாக இருந்தது.
கந்தசாமி, எலெக்ட்ரானிக் தராசை வைத்துவிட்டு போனதின் நோக்கமே அது தான் .
இது தான் வியாபார நூணுக்கம்.நம்பிக்கையின் வேர்.