வாசிக்கவே வாய்த்திருக்கிறது வாழ்க்கை.....

வாசித்து முடியாத
கவிதை தான் ..
எதிர்படும் யாரும்.....

குப்பை பொறுக்கும் சிறுமி....
தேநீர்க் கடைக் காரர்...
ஒற்றை கால் முதியவர்..
பட்டு பாவாடை பாப்பா...
துப்புரவு அண்ணன்....
தண்ணி லாரி தம்பி...
பொக்கை வாய் குழந்தைகள்....
வெற்றிலை கிழவிகள்.....
அன்னை தந்தை....
மாமன் மச்சான்...
உற்றார் உறவினர்...
தெரிந்தார் தெரியார்...
இன்னும் விட்டுப் போன
சொந்தங்கள் யாவரும்...
வாசித்து முடியாத
கவிதை தான் ...
எதிர்படும் யாரும்....

வாசிக்கவே வாய்த்திருக்கிறது வாழ்க்கை...

எழுதியவர் : (21-Oct-13, 10:59 am)
பார்வை : 213

மேலே