போதை
கடவுளை
சுமக்கத்தான்
வரிசையில் நிற்கிறது,
எங்கெங்கும்
மனித கூட்டம்.....
ஒ வென சிரித்தபடி
உள்ளுக்குள்
ஏறிய போதையின்
துளிகளில் தெறிக்கும்
செய்தி துளியில்
கடவுள் சுமக்கும்
சாத்தானின்
கூட்டங்கள்
தன்னை சுமந்து
கொள்ளவே
தேர்ந்தெடுக்கிறது,
கடவுள் என்னும்
மனிதனையும்
மனிதன் என்னும்
கூட்டத்தையும்.....
புரியாத போதை
கடவுளையும்
சாத்தானையும்
சேர்த்தே சுமக்கிறது....