என் பிறந்த நாளில் என் சகோதரி எழுதிய கவிதையும் நான் எழுதிய பதில் கவிதையும்
என் தங்கையின் கவிதை ...
_______________________________________________
புல்லில் பூத்த பனிபொல
கல்லில் செதுக்கிய சிலைபோல்
கரையில் பொங்கும் நுரைபோல
என் மனதில் அரும்பிய மலரே.....
16 ஆம் அகவையில்
பவனி வருகின்ற பால் நிலவே....
இன்று பிறந்தநாள் காணும் புதுமலரே....
என்றென்றும் புதுப்போலிவாய் வாழ்க!!
இனிய உலகின்...
இன்பங்கள் யாவும் பெற்று
இயன்ற அளவு மகிழ்ச்சியாய்
இனிமையை வாழ,என் அண்ணனாகிய
உன்னை வாழ்த்தும்
பிரியா மனமுள்ள பிரியா....!
_______________________________________________
இது எனது பதில் கவிதை ......
_______________________________________________
வாழ்த்தைப் படித்தவுடன்
வார்த்தை வரவில்லையே
வாழ்த்து சொன்னது
வாகைப் பூ மகளோ?இல்லை
வாடிடாத மல்லிகையோ ?
அண்ணனென்று நீ என்னை
அறிவித்து எழுதிவிட்டாய்
அண்ணன் நான் உன்னைத் தான்
அன்புத் தங்கையாய்ப் பார்க்கவில்லை
அதற்கும் மேலாக
அன்பைச் சொரிகின்ற
அன்னையைப் பார்த்துவிட்டேன்!நான்
எதிர்பார்கவே இல்லை
--எனக்கு நீ தந்த பரிசுதனை
புதிர் போட்டு என் நெஞ்சில்
புன்னகைப் பூ பூக்க வைத்தாயே...
பூ மகளே ! நீ வாழிய பல்லாண்டு