குண்டுகளுக்கு இறையான ஈழம்
என்னடா பாவம் செய்தோம்,
தமிழனாய் பிறந்தது தவறா?
தாய் மண்ணின் மக்களாய்(பிள்ளை) அன்று,
அனால் கூண்டுகிளியாக இன்று
கூர் முனை குண்டுகள்
குத்தி கிழித்த நெஞ்சுகளை பார்,
ரணங்களில் துடிக்கும்
தளிர்களை பார்,
மானபங்கம் படுத்தப்பட்ட
மங்கையரை பார்
மரணத்தின் விளிம்பில்
அவல ஓலங்களை பார்,
குண்டுகள் குவித்த பிணக்
குவியளைப்பார்
என்னடா!
மானிட பிறவி,
மானிடர் மத்தியில்
வேற்றுமை கண்டது எவனோ ?
பார்ப்பவர் கண்கள் கண்ணீரில் அல்ல
ஈழத்தின் அவல நிலையை
எடுத்துறைக்கு மொழியாட அது,
வீசப்பட்ட குண்டுகளுக்கு
இறையானது ஈழம்....
தீராத துயரத்தில் .....
என்றும் அன்புடன்
சே. பா