நட்பு

நீ நானாகிறேன்...........!!!

உள்ளதிற்கு,
சிந்தனையாகி!
உணர்விற்கு,
வேராகி!

வறுமைக்கு,
பொருளாகி!
பசிக்கு,
அன்னமாகி!

கோபத்திற்கு,
அமைதியாகி!
சாந்திக்கு,
தோழியாகி!

தேகத்திற்கு,
சருமமாகி!
பிணிக்கு,
அவுடதமாகி!

சிந்தைக்கு,
கருத்தாகி!
நிந்தைக்கு,
அவமானமாகி!

தாய்க்கு,
சேயாகி!
விழிக்கு,
பார்வையாகி!

ரவிக்கு,
கதிராகி!
மதிக்கு,
ஒளியாகி!

சயனத்திற்கு,
கனவாகி!
கவிதைக்கு
கருவாகி!

விரலுக்கு,
எழுதுகோலாகி,
நாமத்திற்கு,
எழுத்தாகி!

தீதிற்கு,
சீராகி!
அகந்தைக்கு,
திமிராகி!

சோடைக்கு,
எதிரியாகி!
இதுவூழுக்கு,
யாதுமாகினேன்...........!!!!

சஹானா தாஸ் .........!!!

எழுதியவர் : சஹானா (23-Oct-13, 9:21 am)
பார்வை : 939

மேலே