என் விழிகளும் அவளுக்கு அடிமை
ஒரு மழைப் பொழுதினில்
காட்டில் கான மயில் ஆடக்
கண்டேன்
எப்பொழுதுமே உணர்வுகள் பொங்கிட
ரசித்திட்ட நான் -அன்று
அவ்விடம் ரசித்திட தலைப்படவே இல்லை
கண்களிடம் காரணம் கேட்டேன்
அவை சொன்னது உடன் உன்
அழகி இருக்கும் பொழுது வேறு
எதை ரசிக்க போகிறாய் என்று
அன்று உணர்ந்தேன் என் மனம்
மட்டுமல்ல என் விழிகளும்
அவளுக்கு அடிமை என்று