நாணம்
![](https://eluthu.com/images/loading.gif)
நீலநிற நந்தவனத்தினிலே மலரும்
முல்லை அல்லியாய் எண்ணற்ற விண்மீன்களும்,
அவற்றின் நடுவே வெண்ணிற இளவரசியாய்
வீற்றிருக்கும் நம் மதிமகளும்,
அவைகளை அவ்வப்பொழுது மறைக்கும்
பறக்கும் பனிப்போர்வை போன்ற முகில்களும்,
நம் மதிமகளின் ஒளியும் குளுமையும்
மிளிரும் விண்மீன்களும்,
செங்கோலேந்தி வரும் அரசன் போல்
நம் பகலவனைக் கண்டவுடன் !நாணத்தோடு
மறைந்து கொள்கிறார்களே நம்மை மறந்து!