எல்லாமே அழகு.....

கண்ணுக்கு மை அழகு
மன்னைக்கு நீ அழகு
காத்திருத்தல் காதலுக்கு அழகு
காதலிக்காக காத்திருத்தல் பேரழகு
மழை நின்றும் சிதறும் தூவானம் அழகு
ஒவ்வொரு மாலையும் உன்னிடம்
பேசி முடித்த பின் என் கண்களில் படரும்
ஆனந்த கண்ணீரும் அழகு
உன்னோடு காதல் வந்ததால் இவ்வுலகமே
எனக்கு அழகு
உனக்காக காத்திருப்பதும் உன்கூடவே
என் இறுதி நாள் வரை வாழப்போவதும்
பேரழகு
அழகே நீதான் எனக்கு அழகு