மனிதனாக வேண்டும்

மனிதனாக வேண்டும்!!!


உடனே கவிஞனாகி
உலகைத் திருத்திட
தீர்மானித்தேன்!

சிந்தனைக் கடலில் மூழ்கி
கருத்து முத்துக் குளிக்க
நான் எத்தனித்தபோது......

மனசாட்சியாம்
கலங்கரை விளக்கக் கதிர்கள்
என்மீது பட்டன!

அந்த ஒளியிலே
என்னை நான் பார்த்தேன்!!

அப்போது உணர்ந்தேன்,
"கவிஞனாக முதலில்
மனிதனாக வேண்டும்"!!!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (24-Oct-13, 12:05 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 58

மேலே