நிலவுப் பெண்ணே

நிலவுப் பெண்ணே
மேக த்திரை விலக்கி
மெலிதாய் நீ முகம் காட்ட
நிலவு முகம் பார்த்து
மலை முகட்டில்
பனித்துளிகள் பரிமளிக்கும்
கடலலைகள் களித்திருக்கும்
தனிமைத் தடாகத்தில்
தாமரைகள் மலர்ந்திருக்கும்
தென்றல் வந்து வீசுகையில்
பவளமல்லி பூத்திருக்கும்

நிலவொளியின் குளிர்ச்சியிலே
நிலமகள் தான் மகிழ்ந்திருக்க
நிழல் மரங்கள் அசைந்தாடி
நித்திரையை மறந்திருக்கும்
கதிரவனின் சுடர் வீச்சில்
மெல்ல மெல்ல நீ மறைய
மீண்டும் ஓர் இரவுக்காய்
காத்திருப்போம் .. வெண்ணிலவே . ...

எழுதியவர் : ஏ .பி.சத்யா ஸ்வரூப் (24-Oct-13, 10:35 am)
பார்வை : 76

மேலே