சிந்தனை அலைகள் --4--தாமரை

மலர்ந்து விரிந்தது
தடாகத்தில் ஒரு தாமரை
மடல் விரித்தது இதழ் சிவந்த
மாசற்ற மலர்
கதிரவன் கரங்களில்
காலையில் மாலையின்
கவிதை பாடியது !
காலைத் தென்றல்
அலை வட்டமிட்டு
தாமரைப் பொழிலில் இயந்து
இசை பாடியது !
தாமரை இலையோ
தண்ணீரில் ஒட்டாமல் நின்றது !

உன் செவ்விதழ் பேசுது
காதல் பாடம்
உன் இலை கூறுது
ஒன்றிலும் ஒட்டாமல் விலகிடும்
காவியின் தத்துவம் !
என் நிலை என்ன சொல்வாய்
ஏடவிழ் இனிய தாமரையே !
காதலன் ஆதவனிடம் கேட்டுச் சொல்வாய் !
காத்திருக்கிறேன்
உன்னைப் போல் நானும்
ஒரு காதல் பெண்ணல்லவோ !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Oct-13, 9:48 am)
பார்வை : 130

மேலே