சந்திப்போமடா சந்திப்போமடி

என் இதயம் சொல்ல துடிக்குது
என் இதயம் கேட்க்க தவிக்குது
நம் அன்பை பகிர்ந்து கொள்ள
அருகே அருகே அமர்ந்து கொஞ்ச
பார்த்த நாட்களின் மகிழ்ச்சியை
பாராத நாட்களின் வெறுப்பினை
பேச நினைத்த தருண உணர்வினை
பேசாமல் போன நாட்களின் தவிப்பினை
இருவரும் பகிர்ந்திட பேசி ரசித்திட
சந்திப்போமடா!!! சந்திப்போமடி !!!
என் நினைவில் உன்னை ரசித்ததை
என் நிஜமில்லாமல் உன்னை நினைத்ததை
என் கண்ணுறக்க கனவில் உன்னை கண்டதை
உன்னை கண்டே என் கண்ணுறக்கம் மறந்ததை
உனக்காக தென்றலிடம் பேசி மகிழ்ந்ததை
தென்றலே நீயென நினைத்து மகிழ்ந்ததை
உன் மூச்சுக்காற்று பட்டதாய் நான் நாணியதை
நீ நாணும் அழகை நினைத்து நானும் ரசித்ததை
இருவரும் பகிர்ந்திட பேசி ரசித்திட
சந்திப்போமடா!!! சந்திப்போமடி !!!
உனக்காகவே நான் எழுதிய காதல் கவிதைகளை
வெற்று காகிதமும் கவிதையாக நான் ரசித்ததை
உன் பேரெழுதி பலபேனாக்களின் மை தீர்த்ததை
உன் கைபட்டதாலே மைதீர்ந்த பேனாசேமித்ததை
கடந்துப்போன நாட்களை கண்முன்னே கண்டிட
இனி வரும் நாட்களில் நம் வாழ்வை வகுத்திட
வருங்காலம் வசந்தகாலம் நீயும்நானும் சேர்ந்திட
இருமனம் இணைந்து திருமணநாள் குறித்திட
இருவரும் பகிர்ந்திட பேசி ரசித்திட
சந்திப்போமடா!!! சந்திப்போமடி !!!
...கவியாழினி...