நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
அம்மம்மா ஆசைகள் ஆயிரமம்மா
ஆகட்டும் அதில் ஒன்று இன்றே நெசமா
ஆகாயம் ஆனந்தம் அளித்திடும் வரமா
அதில் நனைந்திட மகிழந்திடு சுகமே சுகமா
நலமா வளமா இருந்திடு திடமா
தமிழ் கண்ட இவ்வண்டம் அழிவதுண்டா
தேன் சேர்ந்த தின்பண்டம் திரிவதுண்டா
துணை சார்ந்த எம்மனமும் சோர்வதுண்டா
நீர் அடித்து நீர் விலகி பார்த்தது உண்டா
நிலை கொண்ட புகழ் என்றே பூத்திடு செண்டா
சூரியன் புவிசேரா பொழுதொன்றில்ல
மேகங்கள் மண்சேர மறப்பதுமில்ல
தூரங்கள் பந்தத்த பிரிப்பதுமில்ல
நாளங்கள் சேராது உணர்வேதுமில்ல
உன் நாமம் நா கூறா நாளது இல்ல
உன் கோபம் முன் கோபம் விடுத்திடு மெல்ல
உன் சோகம் எந்நாளும் துடைத்திடும் முல்ல
உன் ஞானம் தொடுவானம் தொடுவாரில்ல
வரும் காலம் எதிர் காலம் உன் காலம் சொல்ல
வசந்தமே வசதியா வாய்த்திடும் வெல்ல