தொடரும் கவிப் பயணம்

அன்பு தோழமைகளே...

என்மேல் நீங்களெல்லாம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர் என்று நினைக்கும்போது எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. உங்களைப் போன்ற தோழமைகளின் நட்புக் கிடைக்க நான் பெரும் பாக்கியம் செய்தவனாகவே கருதுகிறேன். நான் கவிதைகள் புனைவதை நிறுத்திவிட்டேன் என்றறிந்ததும் ஓடோடி வந்து தனிவிடுகைகளால் மீண்டும் எழுத வாருங்கள் என்ற மின்னஞ்சல்களை அனுப்பிக் கொண்டே இருந்தீர்கள். நானும் மௌனமாகவே இருந்தேன். ஆனால் உங்கள் அன்பின் வேண்டுக்கோளுக்கு நான் அடிமையாகி விட்டேன் என்பதே உண்மை.

எனக்கு எழுத்தில் இவ்வளவு தோழர்களின் ஆதரவு இருக்கிறது என்பது தெரியாது. இப்போது உணர்கிறேன். என்னை ஆதரித்த எழுத்துத் தளத்திற்கும், அரவணைத்த தோழமைகளுக்கும் என் நன்றியை உங்களின் பாதங்களில் காணிக்கையாய் வைத்து, என் கவிதைப் பயணத்தை மீண்டும் தொடங்குகின்றேன்.

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (27-Oct-13, 7:30 pm)
பார்வை : 181

மேலே