தருமம் தலை காக்கும்

ஒருவன் தினமும் காலை நேரம் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு கோயிலில் தொழுது, அங்கிருக்கும் ஒரு பிச்சைக்காரனுக்கு தினமும் பத்து ரூபா கொடுத்து வந்தான்.

ஒரு வருட காலம் செல்ல, அதைக் குறைத்து தினமும் ஏழு ரூபா ஐம்பது காசுகள் கொடுத்தான்.

அடுத்த வருடம் அதை இன்னும் குறைத்து, வெறும் ஐந்து ரூபா மட்டும் கொடுத்தான்.

இதை கண்ட அந்தப் பிச்சைக்காரன், ஏதாவது பிரச்சனையா என்று வினவ, அவன் கடந்த வருடம் என் மகனை பள்ளியில் சேர்த்தேன், இந்த வருடம் என் மகளை என்று சொல்ல, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் அன்று வினவ, நாலவர் என்று பதில் கொடுத்தான் அந்த மனிதன்.

உடனே, பிச்சைக்காரன், "ஏன் ஐயா என் பணத்தில் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆசைப்படுகிறீர்களே .. இது தவறில்லையா" என்றானே பார்க்கலாம்.!!

எழுதியவர் : (27-Oct-13, 6:04 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 155

சிறந்த நகைச்சுவைகள்

மேலே