கனவு தேவதையே மனமிரங்கு

காலையில் - இனிய
கதிரவனொளி
கண்ணை கசக்கி
விழிக்கிறேன்
வியப்பில்...
சாலையில் - என்
மனச்சோலையில் இருந்தவள்
சேலையில்!!!
படிகளிறங்கி - சில
நொடிகளில் அவள்பாத
அடிகளை நோக்கி...
கடிதினில் விரைந்து
சென்ற நான் - அங்கு
நின்ற அவளிடம்
மென்ற வார்த்தைகளை
ஒன்றாக சொல்ல
காரிகை கண்ணில்
கருவிழியின் அசைவில்
கண்மணியின் சிரிப்பில்
கண்டேன் காதலை
அச்சமின்றி அந்நொடி
அவளிடம் கேட்டேன் - பெண்ணே
மிச்சமின்றி உன்னை நீ
என்னிடம் தந்துவிடு...
காலடியில் காலனவன் - பாச
கயிறு கொண்டு வீசினாலும்
காலமெல்லாம் நீயின்றி
கனப்பதை விட - இக்
காலையிலே காலனுடன்
கடந்திடுவேன் பூவுலகம்...
தயக்கத்தை தள்ளிவிட்டு
தாமதமின்றி சொல்லிவிடு
என்மனதை அள்ளிவிட்டு
நெஞ்சத்தை கிள்ளிவிட்டு
சென்ற கள்ளிகாட்டு தேவதையே!
குனிந்தமுகம் நிமிர்த்தி
குன்றாத புன்னகையுடன்
குரல் தாழ்த்தி - நீ
கூறிய வார்த்தை...
அது போதும் எனக்கு
"யோசிச்சு சொல்கிறேன்"
தூங்கிய கண்கள்
துள்ளி விரிந்தன
ஏங்கிய நெஞ்சம்
ஏமாற்றமடைந்தது
ஏழுமணியோசை - என்
கடிகாரத்தில் கேட்க
கனவு கலைய...
கவலையுடன்...

எழுதியவர் : Nithu (28-Oct-13, 6:21 am)
சேர்த்தது : நிதர்சன்
பார்வை : 82

மேலே