காதல் சுட்ட புண்

எத்தனையோ தாஜ்மஹால்கள்
முள் இருந்த ரோஜாவில் ஆரம்பித்து
கடற்க்கரை மணல் வீடுபோல் கலைந்து
வாழ்கை கடல் அலையில் காணமல் போனது
காதல் தேசம் மட்டும் காதலர்களை
வா ... என்று இரு கரம் நீட்டி அழைக்குது ...!

காதல் ஒரு கண்ணாம் புச்சி விளையாட்டு
என்று தெரிந்தும் கூட விளையாட துடிக்குது
நெருப்பு சுட்ட குழ்ந்தையாக திரும்ப திரும்ப
அதையே தொட துடிக்குது .....................!

காதல் சுட்ட புண் வடுக்களை
பொன் வடுக்கலாய் வருடிப் பாக்குது
அதிலே சுகம் கண்டு எதிர் வீட்டு ஜன்னலை
ஏக்கமாய் பார்க்குது.........................!

காதல் பார்வையின் காந்த சக்தி இது தானோ ..!
காதல் இல்லா வாழ்க்கை வெறும் குப்பை தானோ
ஆதலால் மானிடரே காதல் செய்வீர் என்று
முண்டாசு கவிஞன் சொன்னது சரிதானோ .....

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (28-Oct-13, 6:45 am)
Tanglish : kaadhal sutta pun
பார்வை : 99

மேலே