கைமாறு

மனது நினைப்பதை
கை எழுத
மனது எண்ணுவதை
கை செயல்படுத்த
மனது பார்ப்பதை
கை வடிவம் கொடுக்க
மனது கேட்பதை
கை எடுத்துக் கொடுக்க
மனதால் துதிக்க
கைகள் தொழ
மனதே கைகளுக்கு
என்ன செய்யப் போகிறாய் ?

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (29-Oct-13, 9:07 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : kaimaru
பார்வை : 1142

மேலே