நீயும் நானும்
ஊற்று நான்
வெறும் கானல் நீ...
காற்று நான்
செயற்கை சுவாசம் நீ...
நெருப்பு நான்
அதன் சாம்பல் நீ...
துடிப்பு நான்
செத்தப் பிணமோ நீ...
அறிவு நான்
அறியாமை நீ...
அழகு நான்
அழுக்கு நீ...
தாலாட்டு நான்
பெரும் ஒப்பாரி நீ...
விளையாட்டு நான்
வெற்று பந்து நீ...
உயிர் நான்
ஜடம் நீ...
உணர்வு நான்
சுரணையில்லா உடல் நீ...
சூரியன் நான்
பகுதிநேர மின்சாரம் நீ...
நிலவு நான்
இரவு நீ...
கவிதை நான்
வெட்டி வார்த்தை நீ...
விதை நான்
சொத்தை நீ...
வேர் நான்
சேர் நீ...
அகராதி நான்
அகதி நீ...
வாள் நான்
வால் நீ...
தோள் நான்
தேள் நீ...
எதுகை நான்
மோனை நீ
நம்பிக்கை நான்
வெறும் தும்பிக்கை நீ...!
குறிப்பு
(நான் கல்லூரியில் படிக்கும்போது எனக்கும், என் காதலிக்கும் ஒத்தே வராது. அவளை நினைத்து எழுதியக் கவிதை இது. அவளுக்கே சமர்ப்பணம்)
அன்புடன்
நாகூர் கவி.