தீபத்திருநாள்

நாளாம் நாளாம் திருநாளாம்
தீபாவளி இன்று திருநாளாம்

தீப ஒளி இங்கு ஏக இல்லத்தில்
பிரகாசிக்கும் நன் நாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம் !

வெடிகளின் முழக்கம் ஒரு புறம்
விடியும் வரை ஒலித்திடும்

புத்தாடை உடுத்தி மகிழ்ந்திடும்
பலகாரம் சுவைகள் தந்திடும்

இது ஒருவரல்லவே இருவரல்லவே
உலகே போற்றி கொண்டாடிடும்

நாளாம் நாளாம் திருநாளாம் !

நரகாசுரன் இந்த அரக்கனை
துவம்சம் செய்த இந்த தினத்தினை

பார் முழுதும் போற்றி கொண்டாடும்
பாங்கான இந்த தீப நாள்

இதில் ஒருவரல்லவே இருவரல்லவே
உலகே போரடி கொண்டாடிடும்

நாளாம் நாளாம் திருநாளாம்
தீபாவளி இன்று திருநாளாம்

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (1-Nov-13, 10:09 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 118

மேலே