அவளும் நானும்
வெளிச்சம் வராத ஒரு விடியர்க் காலை
வேக வேக மாக நடந்து வியர்வை வழிய
ஓட்டமும் நடையுமாக ஓடிப் போனேன் .....
அவள் திரு முகத்தை காண தவித்து போனேன் ....
மின்னல் வந்து பயமுரித்தியது பெறு
மழை வரும் என்று கட்டயம் கூரியது .
இடியும் இடித்து ஆமாம் ...ஆமாம் ....என்றது
இருந்தாலும் என்னவளைக் காண மனம் தவித்தது
யாரவது பார்த்து விடுவார்களோ என்று
பயம் வந்து தடுக்கப் பார்த்தது - அவள் முகம்
மனதில் வந்து புண் முறுவலோடு வா..வா என்றது
எனக்கு முன்னாள் மனம் அவளருகே போனது
வந்த தடைகளை தாண்டி தாண்டி வேகமாக
தாவித் தாவிப் போனது குளத்தில் நீர் எடுத்த
கோமளத்தை நான் பார்க்க அவளும் என்னை
பார்க்க கலைப் பொழுது விடிந்து போனது .......
தாமரை மலராக அவளும் சூரியனாக நானும்.....!