காலனே பொறு

காலனைக் கண்டேன்
காலை நேரத்திலே
கால் கடுக்க நிற்கிறேனே
உன் வரவை நோக்கி
என்று கேட்கிறான்


சற்றுப் பொறு காலனே
காலமும் நேரமும் கூடட்டும்
வேலையும் முடியட்டும்
வருகிறேன் உன்னோடு
என்று சொன்னேன்.

என்னை இருக்கச் சொல்கிறாயா
காலப் பரிமாணம் புரியாமல்
நான் வந்தவிட்டால்
நேரம் முடிந்தது என்று கொள்
என்று சொன்னான்


நகைத்தபடியே பகர்ந்தேன்
நான் காலத்தை வென்றவன்
நீ பொறு என்றால் பொறு
நான் யார் என்று நீ அறியவில்லை
என்று பதிலளித்தேன்

வெகுண்டான் காலன்
எனக்கே தவணை சொல்கிறாயா? என்றான்
நான் தான் மனிதன் யாவற்றையும்
தவணை முறையில் வாங்குபவன்
சாவையும் கூட

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (2-Nov-13, 1:23 pm)
Tanglish : kaalane poru
பார்வை : 532

மேலே