ராணுவ வீரன் நான்
மூன்று மாத விடுப்பு..
புதிதாய் பிறந்ததாய் ஓர் உணர்வு...
நினைவுகள் மட்டும் சுமந்து ஓடின பல மாதங்கள்,
"புகைப்படங்கள் பார்க்கும் போது மட்டும் புன்னகைத்தோம் நாங்கள்"
நீர் இல்லா ஊரினில்,
சிந்தின எங்கள் கண்ணீர் துளிகள்...
எங்கள் வீட்டை மறந்து எல்லையினில்,
எதிரிகளை எதிர்த்து நின்றோம் நாங்கள்....
சிரித்து பேசிட நேரம் இல்லை,
இடைவிடாமல் இசைக்கும்,
துப்பாக்கி தோட்டாக்கள் மத்தியில்....
"பார்வை எங்கும் சிந்தி தேங்கும் இரத்த துளிகள்,
சுவாசித்தோம் எங்கும் வெடி மருந்தின் புகை ரணங்கள்"
இவை நாங்கள் நேசித்த என் தேசத்திற்காக,
உறவினர்கள் இன்றி தினம் தினம் வலிகள்,
வார்த்தைகளும் துணை இல்லை தனிமையில்,
தனிமையில் நாங்கள் எல்லையினில்,
"அது என் நாட்டிற்கு எனும் போது
ஓர் இனிமை எங்களுள்ளே"
"கை அசைத்து நாங்கள் சென்றிட
சில நேரம் வீடு திரும்பிடும்
எங்கள் சட்டைகள் மட்டுமே"
வேறென்ன வேண்டும்
இதை தவிர மகிழிச்சியான தருணம்
இல்லை இவ்வுலகில்...
கர்வம் கொள்கிறேன்,
எங்கள் இறப்பு எங்கள் நாட்டிற்கு என்று...
தோலுயர்த்தி சொல்லி கொள்ளுவேன்,
நான் ராணுவ வீரன் என்று....