என்னைப்பற்றி,,,,,

நான் எழுந்து கொள்வதற்கான
நொடிகள் பற்றியே
எழுதிக்கொண்டிருக்கிறேன்,,,,,,
விழிகளிலே நடந்த தடங்கள் மறையவில்லை,
விதியிலே வரைந்த கோடுகள்
ஓவியமாகவில்லை,
விரல்களிலே நீண்ட உணர்வுகள்
பறவையாகவில்லை,
ஆகாயம் அருகிலிருப்பதாய்
என்னங்கள் பாடுகிறது,
உவமைகள் ஊறிக்கிடக்கிறது
உயிர் கொடுக்க நான் மட்டுமே....
கண்ணீரில் வரைந்த கவிதைகள்
கால் முளைத்தும்
ஊனமாய்போனது ஏனோ,

மாது சொன்ன பதில் பிடிக்கவில்லை,
மது சொன்ன பதில் பிடித்திருக்கு.

அன்பு வேண்டாமென்கிறது,
அன்னை வேண்டுமென்கிறாள்
நான் நானாக.....

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (3-Nov-13, 7:17 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 73

மேலே